ரவை 1 கப்
மைதாமாவு – 1 கப்
சீனி – 1 கப்
ஏலக்காய் – 3 (பொடித்தது)
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ரவையைக் கொட்டி 2 மணி நேரம் ஊற வைக்கவும். அதனுடன் மைதாமாவு, சீனி, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைக் கலக்கவும். சீனி இளகும் தன்மை கொண்டதால், தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து மாவைக் கையால் பிசைய வேண்டும்.
பிசைந்த மாவு இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய்யை சூடுபடுத்தவும். எண்ணெய் சூடேறியதும், பிசைந்து வைத்துள்ள மாவினை ஒரு கரண்டி அளவிற்கு எடுத்து எண்ணெயில் ஊற்றவும். சிறிது நேரம் கழித்து வெந்த பிறகு திருப்பி போட்டு எடுத்தால், சூடான சுவையான ரவை பணியாரம். ரெடி. பணியாரம் நன்கு ஆறியதும், காற்றுப்புகாத பாக்சில் வைத்தால், 5 நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.