சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாநாடு. வில்லனாக இஸ்.ஜே.சூர்யா நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. சமீபத்தில் ஒரு பெரிய தொகைக்கு இப்படம் தனியார் தொலைக்காட்சிக்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து டி.ராஜேந்தர் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த மனுவில் படம் திட்டமிட்டபடி வெளியாகாது என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்த நிலையில், தானும், மனைவியும் படத்தை வெளியிட பெருமுயற்சி எடுத்ததாகவும், பைனான்சியர் உத்தம்சந்திடம் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சார்பாக 5 கோடி ரூபாயை தானும், தன் மனைவியும் உத்தரவாதம் செலுத்தியதாகவும், இந்நிலையில் தங்களிடம் தெரிவிக்காமலேயே படத்தில் சாட்டிலைட் உரிமை தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தனக்கு சேர வேண்டிய தொகையை கொடுக்கும்வரை சாட்டிலைட் உரிமைக்கு தடைவிதிக்கவும், பணத்தை தர உத்தரம்சந்த், சுரேஷ் காமாட்சி ஆகியோருக்கு உத்தரவிடவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பைனான்சியர் உத்தம்சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சிக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.