நடிகையாகும் முன்னரே மருத்துவராகி இருப்பது வேறு யாரும் இல்ல இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி தான். இவர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகையாவதற்கு முன்பே மருத்துராகியிருக்கிறார்.
மருத்துவம் படித்துள்ள அவர் பட்டமளிப்பு விழாவில் இயக்குனர் ஷங்கர், அம்மா, சகோதரர் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அவருடைய ட்ரீட்மெண்ட் சினிமாத்துறை தேவைப்படும் என்கின்றனர் இணையவாசிகள்.