முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சசிகலா, சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணைத்தின் அறிக்கை விவாதிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில் விகே சசிகலா, மருத்துவர் சிவகுமார், சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமை செயலாளர் டாக்டர் ராம் மோகன் மீது விசாரணை நடத்த வேண்டும் என ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.
இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு மேலும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை பேரவையில் வைக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சசிகலா, சி.விஜயபாஸ்கரை விசாரிக்க பரிந்துரை!!
