டெல்லி சட்டசபையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
பா.ஜ.க.வின் ஆபரேஷன் தாமரை முயற்சி டெல்லியில் ஆபரேஷன் சேறு என மாறியுள்ளது என்பதை பொதுமக்கள் மத்தியில் நிரூபிக்கும் வகையில், சட்டசபையில் நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வர விரும்புவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.
பா.ஜ.க. 40 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை குறிவைத்து, அவர்கள் கட்சி மாற தலா ரூ.20 கோடி வழங்க முயற்சித்ததாகவும் அவர் கூறினார். அதாவது டெல்லியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த பாஜக 800 கோடி ரூபாய் செலவு செய்ததாக அவர் குற்றம்சாட்டினார்.இந்நிலையில், டெல்லி சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மிக்கு 62 எம்எல்ஏக்கள் உள்ளனர், பா.ஜ.க.வுக்கு 8 பேர் உள்ளனர்.இந்நிலையில், டெல்லி சட்ட சபையில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.