

தேவையானவை:
கறி – அரை கிலோ, பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – 100 கிராம், இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன், சோம்பு – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 5, கொத்தமல்லித்தழை – அரை கட்டு, தேங்காய்த் துருவல் – 50 கிராம், உப்பு – தேவையான அளவு, வினிகர் – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 30 மிலி
செய்முறை:
கறி நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். தேங்காயுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும். சோம்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையை சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் நறுக்கிய வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கிய பின் அதனுடன் கறியை சேர்த்து வதக்கி, உப்பு, அரைத்து வைத்திருக்கும் மசாலாவைச் சேர்த்து, பச்சை வாசனை நீங்கி மசாலாவிலிருந்து எண்ணெய் பிரிந்து மேலே வரும் வரை வதக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம். அடுப்பில் இருக்கும் கறி கலவையுடன் வினிகர் மற்றும் தேவையான அளவு சுடுநீர் சேர்த்து நன்கு வேகவிடவும். மட்டன் நன்கு வெந்தவுடன் தேங்காய் விழுது சேர்த்துக் கலக்கி, அடுப்பை சிறு தீயில் வைத்து கலவையை வேகவிடவும். பின்னர் கரம் மசாலாத்தூள் சேர்த்து கிளறிவிட்டு, குழம்பு தயார் ஆனதும் அடுப்பிலிருந்து இறக்கி சூடாகப் பரிமாறவும். இந்தக் கிரீன் கறி… சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை உள்ளிட்ட எல்லா வகை உணவுகளுக்கும் பொருத்தமாக இருக்கும். பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லித்தழையை அதிகமாகப் பயன்படுத்துவதால் குழம்பு பச்சை நிறத்தில் இருக்கும். அதனால்தான் இந்த டிஷ்{க்கு கிரீன் கறி எனப் பெயர்.
