பாஸ்தா சாஸ்
தேவையானவை:
தக்காளி – 5, வெங்காயம் – ஒன்று, நறுக்கிய கலர் குடமிளகாய் – ஒரு கப், பூண்டு – 5 பற்கள், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், சர்க்கரை – கால் டீஸ்பூன், இத்தாலிய சீஸனிங் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – ஒரு டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
தக்காளியை வேகவைத்து தோல் உரித்து ஆறியவுடன் மசித்து, வடிகட்டி வைக்கவும். வெங்காயம், பூண்டு, கலர் குடமிளகாய் எல்லாவற்றையும் சிறிய துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, இத்தாலிய சீஸனிங் சேர்த்து… உடனே வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் குடமிளகாய் சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, தக்காளிச் சாறு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து சாஸ் பதம் வரும் வரை கொதிக்கவிடவும். ஆறியபின் டப்பாவில் போட்டு, ஃப்ரிட்ஜில் வைத்து, தேவைப்படும்போது எடுத்து உபயோகிக்கவும். இதை வெஜ் பாஸ்தா தயாரிக்கப் பயன்படுத்தலாம். பீட்ஸா செய்யும்போது, பீட்ஸா பேஸ்’ மேல் தடவலாம்.