தேவையானவை:
பாஸ்தா – ஒரு பாக்கெட், கேரட் – 2, குடமிளகாய், வெள்ளரிக்காய் – தலா ஒன்று, சுத்தம் செய்து நறுக்கிய பாலக்கீரை – ஒரு கப், ஆலிவ் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், பூண்டு – 2 பற்கள், துருவிய சீஸ் – தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
பாஸ்தாவை வேகவைத்து வடித்துக்கொள்ளவும். வேகவைத்த தண்ணீரை சேமிக்கவும். கேரட், குடமிளகாய், வெள்ளரிக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கவும். கடாயில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி, பூண்டு சேர்த்துக் கிளறி… கேரட், குடமிளகாய், வெள்ளரிக்காய், கீரையைப் போட்டு வதக்கவும். வெந்தவுடன் வேகவைத்த பாஸ்தா, உப்பு சேர்த்து, பாஸ்தா வேகவைத்த தண்ணீர் சிறிதளவு சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கி, துருவிய சீஸ் தூவி சூடாக பரிமாறவும்.