• Fri. Apr 19th, 2024

அப்துல்கலாம் நினைவிடத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் படங்கள்: கடும் எதிர்ப்பால் படங்கள் அகற்றம்

ByA.Tamilselvan

Apr 29, 2022

அப்துல்கலாம் நினைவிடத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் படங்கள் வைக்கப்பட்டளதாகவும் அதற்கு எழுந்த எதிர்ப்பால் பின்னர் படங்கள் அகற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் சிபிஎம் வி.காசிநாததுரை கூறும் போது : இராமேஸ்வரத்தில் அமைக்கப் பட்டுள்ள அப்துல்கலாம் நினைவிடத் தில் ஒன்றிய செய்தி ஒலிபரப்பு அமைச்ச கத்தின் சார்பில் பிப்ரவரி 27 முதல் மே 1 வரை சுதந்திரப் போராட்ட வீரர்களின் திரு வுருவப் படக்கண்காட்சி திறக்கப் பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் படங்க ளுடன், சுதந்திர போராட்டத்தில் எவ்வித பங்களிப்பும் செய்யாதது மட்டுமல்ல, பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக செயல் பட்ட ஆர்.எஸ்.எஸ். ஸ்தாபக தலை வர்களான ஹெட்கேவர், கோல்வால்கர் ஆகியோரது படங்களையும் இணைத்து ஒன்றிய அமைச்சகம் வைத்திருந்தது. இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இராமேஸ்வரம் தாலுகா செயலாளர் ஜி.சிவா, இ.ஜஸ்டின் உள்ளிட்டோர் அப்துல்கலாம் நினைவி டத்தில் வைக்கப்பட்டுள்ள ஆர்எஸ்எஸ் தலைவர்கள் படங்களை அப்புறப்படுத்த வேண்டும் என அரசு அதிகாரிகளிடம் கூறி னர். அதன்பின் ஹெட்கேவர், கோல்வால் கர் படங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. ஒன்றிய பாஜக அரசு தனக்கு சாதக மாக தொடர்ந்து வரலாற்றை திரித்து எழுதி வரும் சூழலில் தமிழக அரசும் மக்க ளும் இப்படிப்பட்ட அத்துமீறல்களை அனுமதிக்கக் கூடாது. என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *