• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

பாமாயில் ஏற்றுமதி நிறுத்தம்… அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு…

Byகாயத்ரி

Apr 29, 2022

இந்தோனேஷியா தான் உலகிலேயே அதிகமான பாமாயில் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. ஆனால் அங்கு சமையல் எண்ணெய் விலை அதிகரித்து விட்டதால் பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா தற்போது தடைவிதித்துள்ளது. இந்த தடை ஏப்ரல் 28 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவானது தன்னுடைய பாமாயில் தேவையை பெருமளவில் இந்தோனேஷியாவில் இருந்து பூர்த்தி செய்து கொள்கிறது. இந்த நிலையில் இந்தோனேஷியா தன்னுடைய நாட்டிலிருந்து பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதால் இந்தியா கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்தியாவில் பாமாயில் மட்டுமல்லாமல் பல்வேறு சமையல் எண்ணெய்களின் விலையும் அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி பாமாயில் விலை உயர்வால் மற்ற பொருட்களின் விலையும் சேர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி சாக்லேட், ஷாம்பூ, சோப்பு, நூடுல்ஸ், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களின் விலையும் உயரும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இந்த பொருட்கள் தயாரிப்பதற்கு பாமாயில் தேவைப்படுகிறது. மேலும் அழகு சாதன பொருட்கள் விலையும் உயரும் என்று கூறப்படுகிறது.