• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் அருகே ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டித்து கிடந்த ஆண் சடலம்..!

ByKalamegam Viswanathan

Aug 25, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டித்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக ரயில்வே போலீசுக்கு அப்பகுதி பொது மக்கள் தகவல் தெரிவித்தனர்.

மதுரை ரயில்வே போலீசார் மற்றும் சோழவந்தான் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மேற்கொண்ட விசாரணையில்

இறந்தவர் திண்டுக்கல் நாகல் நகரை சேர்ந்த சதாசிவம் என்பவர் உயிரிழந்துள்ளது தெரியவந்தது,

மதுரை சென்னை சென்ற பயணிகள் ரயில் சதாசிவம் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டி உயிரிழந்திருக்கலாம் என போலீசாரால் சந்தேகப்படுகிறது.

எனினும் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த நபர் இங்கு எப்படி இறந்தார் எனவும், இது தற்கொலையா, கொலையா கொலை செய்து இங்கு உடலை வீசிச் சென்றனரா அல்லது ரயில் பயணத்தில் சென்ற போது தவறி தண்டவாளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

போலீசாரின் முழு விசாரணைக்கு பிறகே தற்கொலையா கொலையா என்பது தெரியவரும் என போலீஸ் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகின்றது.