• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

Comeback கொடுப்பதில் நாம் Specialist – மு.க.ஸ்டாலின்..,

ஊருக்கே வெளிச்சம் கொடுக்கும் விளக்குக்கு, தனக்கு கீழே இருக்கும் இருட்டு தெரியாது. அப்படித்தான் நம்மிடம் இருந்த தவறுகளை கண்டறியத் தவறிவிட்டோம் – திமுக செயற்குழுவில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மேலும் செயற்குழு கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ..,

நாம் தோல்வியடைய பல காரணங்கள் இருப்பினும் நிர்வாகிகளின் செயல்பாடுகளும் ஒன்று. அதையும் நாம் மறைக்கத் தேவையில்லை; நம் தவறுகளை முதலில் நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்.

நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் பாரக்காத தோல்வியும் இல்லை; தேர்தலில் தான் தோல்வி அடைந்திருக்கிறோமே தவிர, நிரந்தரமாக இல்லை.

மீண்டும் இளைஞர்கள், பெண்கள் நம்பிக்கையை பெற்றுத் தருவது போல நம் நடவடிக்கை அமைய வேண்டும்.

புதுமுகங்களுக்கு அதிகமான எண்ணிக்கையில் பொறுப்புகளை வழங்கப் போகிறோம்.

கட்சியை மறுசீரமைப்பு செய்வது மூலமாக மட்டும்தான், நாம் மீண்டும் அரசியல் வெற்றியை பெற முடியும்.

ஒவ்வொரு தொண்டனும் ஒரு நிர்வாகியாக செயல்படும் போதுதான் இயக்கம் வளரும்; இயக்கம் வாழும் என்று ஸ்டாலின் பேசியதோடு மட்டுமல்லாமல் ..,

ஒரு மாவட்டச் செயலாளரை மட்டும் வைத்து அந்த மாவட்டத்தில் கட்சியை வளர்த்துவிட முடியாது.

நாம் Bore அடிக்கிறது என அரசியலுக்கு வந்தவர்கள் இல்லை. போராட வந்தவர்கள் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.