இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தி இருக்கவேண்டும் என அமித்ஷா கூறியிருந்தார்.இதற்கு பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெருவித்தனர்.சமூக வலைத்தளங்களிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில்
நடிகர் கிச்சா சுதீப், அஜய் தேவ்கான் இடையில் இந்தி மொழி குறித்து உரையாடல் நடைபெற்றது. இதில் அஜய் தேவ்கன் இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்று கூறினார். இதற்கு கிச்சா சுதீப் இந்தி மற்ற மொழிகளை போல இந்தியாவின் ஒரு மொழி தான் என கூறினார். அஜய் தேவ்கனின் பேசுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கர்நாடகாவில் இந்திமொழிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அஜய்தேவ்கன்னுக்கு கண்டனம் தெரிவித்தும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
இந்த விவாதம் பெரிதாக எழுந்த நிலையில் பலரும் தங்களது கருத்துக்களை பரிமாறி வருகின்றனர். இந்நிலையில் இந்திக்கு ஆதரவாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மந்திரி சஞ்சய் நிஷாத் கருத்து தெரிவித்துள்ளார். “நீங்கள் இந்தியாவில் வசிக்கிறீர்கள் என்றால் இந்தியை நேசிக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் வெளிநாட்டவராக கருதப்படுவீர்கள். இந்தி பேச முடியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறி வேறு எங்காவது செல்லுங்கள்”.இவ்வாறு சஞ்சய் நிஷாத் கூறியுள்ளார்.