தமிழக அரசின் புதிய காப்பீட்டுத் திட்டம் 2021யை, 01-07-2021 முதல் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு புதுப்பித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த கால அரசை போல தற்போதைய அரசும், தங்களின் பங்களிப்பாக எந்த நிதியையும் செலுத்தப் போவதில்லை. இது அரசு உழியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு முடிவின்படி மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்திட வலியுறுத்தி மதுரை மாவட்டத்தில், மாவட்டத் தலைவர் நடராஜன் தலைமையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மூலம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

இந்த மனு வழங்கப்பட்ட போது, ஜெய ராஜராஜேஸ்வரன், சின்னப்பொன்னு, கல்யாணசுந்தரம், மாரியப்பன், மணிகண்டன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.