• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு ஒருங்கிணைப்பு குழு கூட்டம்..,

ByKalamegam Viswanathan

May 26, 2026

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகின்ற 30 ஆம் தேதி வைகாசி விசாகம் பால்குட திருவிழா நடைபெறவுள்ளது. இது தொடர்பாக
ஆர் டி.ஒ சிவஜோதி தலைமையில் கோவில் நிர்வாக அதிகாரி ஞானசேகரன், காவல் உதவி ஆணையார் சசிப்பிரியா முன்னிலையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் திருக்கோயில் வளாகத்தில் உள்ள வள்ளி தேவசேனா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் காவல்துறை மாநகராட்சி துறை வருவாய் துறை போக்குவரத்து காவல்துறை தீயணைப்புத் துறையினர் மின்சார துறை மற்றும் கோயில் பணியாளர்கள் ஸ்தானிகப்பட்டர்கள்போன்ற அனைத்து துறைகளும் சார்பாக கலந்து கொண்டனர் இதில் வைகாசி விசாகத்தன்று வரும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதியான குடிநீர் வசதி போக்குவரத்து வசதி கழிப்பறை வசதி மற்றும் மருத்துவ வசதி மற்றும் கூட்டத்தினரை முறைப்படுத்துவது குறித்து பாதுகாப்புக்கான ஆலோசனை நடைபெற்றது.

இந்நிலையில் வைகாசி விசாகத் திருவிழாவுக்காக பக்தர்களின் பாதுகாப்பு குறித்து முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய மதுரை வடக்கு கூடுதல் ஆணையாளர் மதிவாணன் திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் பாதை பெரியரதவீதி கோவில் முன்பாக சன்னதி தெரு பதினாறாம் மண்டபத்தில் அருகே பூக்குழி இறங்கும் ஆகிய இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.