• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மின்னல் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் பலி..!

ByP.Thangapandi

May 26, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீல்நாயக்கன்பட்டியை அடுத்த சூலப்புரத்தைச் சேர்ந்த வாசியம்மாள் என்பவருக்கு குன்னுவார்பட்டி அருகில் தோட்டம் அமைந்துள்ளது.,

இந்த தோட்டத்தில் பருத்தி எடுக்க இன்று தனது உறவினர்களான ராமுத்தாய், தனிக்கொடி, கணபதி மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சிலர் என 15 க்கும் மேற்பட்டோர் பருத்தி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று மாலை திடீரென பெய்த மழைக்கு அருகே உள்ள புளியமரத்தின் அடியில் ஒதுங்கிய போது புளியமரத்தில் விழுந்த மின்னல் தாக்கி ராமுத்தாய், தனிக்கொடி, கணபதி என்ற மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் வாசியம்மாள் படுகாயமடைந்த நிலையில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்து விரைந்து வந்த எழுமலை காவல் நிலைய போலீசார் மின்னல் தாக்கி உயிரிழந்த ராமுத்தாய், தனிக்கொடி, கணபதியின் உடல்களை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பருத்தி எடுக்க சென்ற போது மின்னல் தாக்கி ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.