

மதுரையில் கொரோனா காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 305 நாட்களுக்கு மேலாக உணவு வழங்கிய அட்சய பாத்திரம் அதன் நிறுவனத் தலைவர் நெல்லை பாலு தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில் “எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்ட அதிமுக பல்வேறு சவால்களை தாண்டி செயல்படுகிறது, திமுகவின் அடக்குமுறையை தாண்டி அதிமுக செயல்படுகிறது, அதிமுக மட்டுமே தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது, அதிமுகவின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும் முயற்சி நடைபெறுகிறது, இ.பி.எஸ் – ஒ.பி.எஸ் அதிமுகவின் பாதுகாப்பு கவசங்களாக திகழ்கிறார்கள், 50 ஆண்டுகளாக அரசியல் வரலாற்றில் அதிமுக 7 முறை ஆட்சி செய்துள்ளது.
திமுக அறிவித்த வாக்குறுதியை இன்னும் செயல்படுத்தவில்லை, தமிழகத்தில் முழுதும் நடைபெற்ற நகர்புற தேர்தலில் முறைகேடுகள் செய்து திமுக வெற்றியை பெற்றுள்ளது, திமுக கூட்டணி கட்சி போட்டியிடும் இடங்களில் திமுக போட்டியிட்டதை பார்த்தால் கூட்டணி கட்சியினர் கையாளகாதவர்கள் என திமுகவினர் கூட்டணியை பார்க்கிறார்கள் என நினைக்கிறேன், திமுக தலைமையிலான அரசு நாடகங்களை மட்டுமே நடத்துகிறது, மக்கள் அதிமுகவுக்கு மட்டுமே வாக்களித்து உள்ளார்கள், தொழில்நுட்ப கோளாறு செய்தி திமுக வெற்றி பெற்றதோ என தோன்றுகிறது, தேர்தல் ஆணையத்தால் இ.பி.எஸ் – ஒ.பி.எஸ் அங்கீகரிக்கப்பட்டு உள்ளனர், இ.பி.எஸ் – ஒ.பி.எஸ் இணைத்து பல்வேறு தேர்தல்களை சந்தித்து உள்ளனர், அறிஞர் அண்ணா கற்று கொடுத்த கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை அனைவரும் கடைபிடிக்க வேண்டும், அதிமுக தலைமைக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும், அதிமுகவின் கொள்கைக்கும், கோட்பாட்டுக்கும் எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என கூறினார்.

