• Wed. May 27th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

த வெ க தற்போது நடத்திக் கொண்டுள்ளது குதிரை பேர அரசியல் அல்ல கழுதை பேர அரசியல்..,

ByS. SRIDHAR

May 27, 2026

புதுக்கோட்டையில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்திற்கு கலந்து கொள்ள வந்த பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளரிடம் பேசுகையில்,

எடுத்த உடனே புதிதாக பதவி ஏற்ற அரசை குறை கூட கூடாது என்று இருந்தாலும் மிகக் கொடுமையான சம்பவங்கள் நடக்கும்போது அதை அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டுவதும் கூட அவர்களது நடவடிக்கைகள் சாதாரணமாக இருக்கக் கூடாது கடுமையாக இருக்க வேண்டும் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் அப்படி கொடுக்க தவறினால் எந்த வாக்குறுதியை கொடுத்து அவர்கள் ஆட்சிக்கு வந்தார்களோ இவையெல்லாம் தடுக்கப்பட வேண்டும் உறுதி கொடுத்து ஆட்சிக்குப் பிடித்தார்களோ அந்த உறுதிபாட்டில் இருந்து அவர்கள் விலகி விட்டார்கள் என்று அர்த்தம்

முந்தைய ஆட்சியாளர்களின் நீட்சியாக தான் இந்த அரசை பார்க்க முடியும். இளைஞர்கள் எதிர்பார்த்த பெண்கள் எதிர்பார்த்த மாறுதல் இல்லாத அரசாங்கம் இது இல்லை என்பதை தான் காட்டுகிறது.

மாற்றம் வேண்டும் என்று கூறி இந்த அரசை மக்கள் தேர்ந்தெடுத்தனர் ஆனால் அந்த மாற்றத்தை அவர்கள் கொடுக்காமல் எம்எல்ஏக்களை விலை பேசி, தமிழக வெற்றி கழகம் தற்போது நடத்திக் கொண்டுள்ளது குதிரை பேர அரசியல் அல்ல கழுதை பேர அரசியல் இதைவிட கேவலமான நிலைமை தமிழகத்தில் வந்தது இல்லை என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆட்சி ஐந்தாண்டு தொடர வேண்டும் என்று தான் நாம் நினைக்கிறோம்.

எழுச்சியோடு மாற்றத்தை கொண்டு வந்த இளைஞர்களும் மக்களும் பெண்களும் எதிர்பார்த்த அரசு இல்லை என்று கூறி இதய அரசை தூக்கி எறியவும் தயங்க மாட்டார்கள்.

இதை எச்சரிக்கை மணியாக தமிழக வெற்றிக்கழகம் உணர வேண்டும். சென்ற ஆட்சியில் நீட்சியாக தான் தமிழக வெற்றிக்கழக அரசை பார்க்க முடிகிறது.

விஜயை கடந்த காலங்களில் ஆர் எஸ் எஸ் இன் செல்ல பிள்ளை என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறிவந்த நிலையில் தற்போது விஜய் அரசின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளதால் ஆர் எஸ் எஸ் பேரபிள்ளையாக தான் திருமாவளவனை அனைவரும் பார்க்கின்றனர் அதற்காக திருமாவளவன்க்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

தமிழகத்திற்கு நல்ல திட்டங்களை கொண்டு வருவது வேண்டும் என்று தான் பிரதமர் நினைக்கிறார் இன்று பிரதமரை சந்திக்கும் விஜய் அந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த உறுதி அளிக்க வேண்டும்….

பொதுவாக சட்டமன்றத்திற்கு இன்று கோட்டைக்கு என்று ஒரு மரபு உள்ளது அந்த மரபு தற்போது மீறப்பட்டுள்ளது இது தெரிந்து செய்தார்களா தெரியாமல் செய்தார்களா என்று தெரியவில்லை இனி அவர்கள் திருத்திக் கொள்ள வேண்டும்

அதிமுக பல சவால்களை சந்தித்த கட்சி சவாலை முன்வைத்து தான் எம் ஜி ஆர் கட்சி தொடங்கினார் ஆகையால் அவர்களின் பிரச்சனையை அவர்கள் தீர்த்துக் கொள்வார்கள்.