• Sun. May 31st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..,

BySeenu

May 31, 2026

கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மாணவ மாணவிகளிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

தமிழ்நாடு, பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கோவையில் இன்று பல்வேறு இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்கிறார். மேலும் அரசு அலுவலர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை மேற்கொள்கிறார்.
அதன்படி கோயம்புத்தூர் நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்குள்ள உடற்பயிற்சி கூடம், விளையாட்டு மைதானம், ஆகியவற்றை ஆய்வு செய்தார்.மேலும் அங்கு விளையாட்டு, யோகா பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மாணவ மாணவிகளிடம் தேவைகளை கேட்டறிந்தார்.

அப்போது மாணவ மாணவிகள் தங்களுக்குத் தேவையான டி-ஷர்ட், ஷூ, காலை உணவு, கூடுதலான விடுதி வசதிகள், விளையாட்டு உபகரணங்கள் தேவைப்படுவதாக அமைச்சரிடம் கோரினர்.அவற்றையெல்லாம் கேட்டறிந்த அமைச்சர் உடனடியாக அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாணவர்களுக்கு உறுதி அளித்தார். மேலும் அனைத்து விளையாட்டு மாணவ மாணவிகளுடனும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உட்பட விளையாட்டுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.