• Wed. Jun 10th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீவீரமாகாளியம்மன் ஆலயத்தில் மகோத்சவ பெருவிழா..,

ByM.I.MOHAMMED FAROOK

May 31, 2026

காரைக்கால் அடுத்த வடமறைக்காட்டில் அமைந்துள்ள பழமைவாய்ந்த ஸ்ரீவீரமாகாளியம்மன் ஆலயம். இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் மகோத்சவ பெருவிழா நடைபெறுவது வழக்கம்.

;இந்த ஆண்டு மகோத்சவ பெருவிழா கடந்த 16-ஆம் தேதி பந்தல் கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று வந்தது. இன்று அம்மன் சந்தன காப்பு அலகரத்தில் பக்தர்கள் அருள் பாலித்தார். தொடர்ந்து உற்சவர் வீரமாகாளி அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு அருள் பெற்றனர். அடுத்த மாதம் 07-ம் தேதி விடையாற்றி நிகழ்ச்சியுடன் வைகாசி மகோத்சவ திருவிழா நிறைவு பெறுகிறது.