• Sun. May 31st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றத்தில் “பார்க்கலாம் ஆனால் பயன்படுத்த முடியாது” என்ற நிலையில் எக்கோ பார்க்..,

ByKalamegam Viswanathan

May 31, 2026

திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ளகல்வெட்டு குகை கோவில் வளாகத்தில் கடந்த 2008ஆம் ஆண்டில்இரண்டரை ஏக்கர் பரப்பளவில ரூ.36 லட்சம் செலவில் அறிவியல் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது.

இதில்மகாகவி பாரதியாரின் பாடலுக்கு ஏற்பசிறுவர் சிறுமிகள் ஓடி,ஆடி, விளையாடி பொழுதுபோக்குவதற்கு ஏற்ப பல்வேறு விளையாட்டு சாதனங்களும் அறிவுபூர்வமான சாதனங்களும் அமைக்கப்பட்டது. அதில்குறிப்பாக சூரிய சக்தியில் இயங்கும் ரேடியோ,நியூட்டனின் விதிகளை குறிக்கும் அமைப்பு மியூசிக் கல், டியூப்ஸ்.உடலியல் உள்ளிட்டஆக்கபூர்வமான அறிவியல் சார்ந்த சாதனங்கள் இடம் பெற்றன.அவை மாணவ மாணவிகளை பெரிதும் கவர்ந்தது இதனையொட்டி மதுரை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பள்ளி மாணவ மாணவிகள அறிவியல் சிறுவர் பூங்காவிற்கு படைத்து வந்து பொழுதுபோக்கியதோடு அறிவியல் சாதனங்களின் செயல் பாடுகளை தெரிந்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்த பூங்கா வளாகத்திலேயே மூன்றரை ஏக்கர் பரப்பளவில் ரூ.3.36 கோடியில்சுற்றுலா துறையின் கீழ் சுற்றுச்சூழல் பூங்கா (எக்கோ பார்க்) பச்சை பசேரென்று கண்களுக்கு குளிர்ச்சியாக அமைக்கப்பட்டது. இதில் இசைக்கு ஏற்ப நடன நீருற்று சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த பூங்காவிற்கு நாள்தோறும் ஏராளமானசுற்றுலா பயணிகள் வந்து செல்லுகிறார்கள் குறிப் பாகஞாயிற்றுக்கிழமை உள்ளிட்டவிடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தவாறு உள்ளது. சமீப காலமாக திருமண ஜோடிகளை போட்டோ வீடியோ எடுக்க கூடியபோட்டோகிராபர்களின் ஸ்டியோவாக திகழ்கிறது பூங்காவின் நுழைவுகட்டணமாக பெரியவர்களுக்கு ரூ 10, சிறுவர்களுக்கு ரூ 5 வசூலிக்கப்படுகிறது. இதே சமயம் மாலை 5 மணிக்கு மேல் இசைக்கு ஏற்ப நடனமாடும் செயற்கை நீரூற்றை கண்டு ரசிப்பதற்காக பெரியவர்களுக்கு ரூ 20 சிறியவர்களுக்கு ரூ 10 என்று கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இதில்கடந்த 18ஆண்டுக்கு முன்பு அமைக்கபபட்ட அறிவியல் சிறுவர் பூங்கா முறையாக பராமரிக்கப்படவில்லை அதனால் உஞ்சல் சறுக்கு உள்ளிட்ட அறிவியல் சாதனைகள் யாவும் சேதமடைந்து பயன் படுத்த முடியாத நிலையில் காட்சி பொருளாக உருமாறி பெயருக்கு மட்டுமே அறிவியல் பூங்கா உள்ளது. இதேபோல சுற்றுச்சூழல் பூங்காவின் (எக்கோ பார்க்கில்) நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டு இருந்த செயற்கை நீர் ஊற்றானது வண்ணமயமாக இருந்தது. அதை பூங்காவிற்கு வந்தவர்கள் மட்டுமல்லாது பூங்காவின் வெளிப்பிரகாரமானகிரிவல பாதையில் சென்று வந்தவர்களும் அதை மெய்சிலிர்ப்போடு கண்டு ரசித்து வந்தனர்.

ஆனால் தற்போது செயற்கை நீருற்றுசெயல் படாமல் உள்ளது எக்கோ பார்க்கின் சிறப்பு அம்சமான இசைக்கு ஏற்ப நடன நீருற்றும் செயல்படாமல் காட்சிபொருளாக இருந்து வருகிறது எக்கோ பார்க் வருபவர்கள் புல், செடி,கொடிகளை பார்த்து செல்லக்கூடிய அவல நிலை இருந்து வருகிறது. இதை கோவில் நிர்வாகம் கண்டும் காணாதாது போலஇருப்பது தான் ஏனோ தெரியவில்லை இனியாவது அறிவியல் பூங்காவுடன் கூடிய எக்கோ பார்க்கை சீரமைப்பதில்போர்க் கால நடவடிக்கை வேண்டும் என்றுசமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.