• Wed. May 27th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

டிரான்ஸ்பார்மர் ஊழல் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது-நிர்மல் குமார்..,

ByKalamegam Viswanathan

May 27, 2026

உசிலம்பட்டி ஏழுமலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவும் அவர்களுக்கு நிவாரணம் உதவி வழங்குவதற்காகவும் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த சட்டத்துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் தொடர்ந்து அவர் கூறும்போது:

நேற்று உசிலம்பட்டி அருகே மின்னல் தாக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் ஒருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார் அவர் குடும்பத்தை சந்திப்பதற்காகவும் நிவாரணம் வழங்குவதற்காகவும் வந்திருக்கிறேன். உயிரிழந்தவர்களுக்கு நான்கு லட்ச ரூபாய் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தயாராக உள்ளது அவர்களை சந்தித்து வழங்க உள்ளேன்.

மேகதாதுவில் அணை கட்டிய தீருவோம் என துணை முதல் அமைச்சர் டிகே சிவகுமார் பேசி வருவது குறித்த கேள்விக்கு:

எந்த காலத்திலும் நமது முதல்வர் மேகதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டார். அதற்கு தேவையான அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கையை எடுப்போம்.

முதல்வர் டெல்லியில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திப்பு குறித்த கேள்விக்கு: தமிழக மக்களின் தேவைகள் பிரச்சனைகள் குறித்து கோரிக்கை வைப்பார் நிதி ஆதாரம் தமிழகத்திற்கு வராததால் மீனவர்கள் பிரச்சனை இது போன்ற மக்களின் பிரச்சினைகள் குறித்து தான் சந்திப்பு இருக்கும்.

திமுக ஓனர் மற்றும் விசிகவினர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் குறித்த கேள்விக்கு: திமுகவினர் என்ன செய்வது என்று தெரியாமல் அழுத்தத்தில் உள்ளனர்.

ஐந்து வருடமாக அவர்கள் மக்கள் விரோத செயல்கள் செய்ததால் தான் மக்கள் அவர்களுக்கு பதிலை கொடுத்திருக்கிறார்கள். இப்போது எங்களுடன் உள்ள கூட்டணி கட்சியினருடன் பிரச்சனை செய்து தேவையில்லாத தகராறு செய்து இன்றைக்கும் திமுக காரர்கள் மக்கள் விரோத செயல்களை தான் செய்து வருகிறார்கள். அரசுக்கு எந்த வகையிலாவது குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் மக்களுக்கு இது தெரியும் அனைத்தும் கலை எடுக்கப்பட்டு மக்களுக்கான செயல்பாடுகளை மட்டும் நோக்கமாக கொண்டு வேலைகள் தொடங்கும்.

அதிமுகவிலிருந்து எம்எல்ஏக்கள் த வே காவுக்கு வருவது குறித்த கேள்விக்கு:

அது அவங்களுடைய உட்கட்சி பிரச்சனை அதை நாங்கள் பேச வேண்டியதில்லை. தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டு ராஜினாமா செய்தால் அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. தனிப்பட்ட விறுப்பு வெறுப்பு. ராஜினாமா செய்து விட்டு வருபவர்கள் அவர்களின் தனிப்பட்ட விருப்பம் சேர்பவர்களை தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது.

மின்சாரம் கணக்கிட்டு முறையாக நடத்தப்படாத குறித்த கேள்விக்கு: மின்சாரக் கணக்கீடாளர்கள் 7000 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 1500 பேர் இருக்கிறார்கள் 4500 பணியிடங்கள் காலியாக உள்ளது. பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்சாரத்துறை மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக மின்தடைகள் ஏற்பட்டுள்ளது சீரமைக்கப்பட்டு வருகிறது. அதிகமான ரோந்து வாகனங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. கால் சென்டர் மூலமாகவும் சோசியல் மீடியா மூலமாகவும் தடைகளை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போன வாரத்தை விட இந்த வாரம் 80 சதவீத குறைகள் சரி செய்யப்பட்டுள்ளது. கிண்டியில் டிரான்ஸ்பார்மர் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டது அதுவும் சரி செய்யப்பட்டுள்ளது. நான்கு நாட்களுக்கு முன்பு இருந்த பிரச்சனைகள் தற்போது சரி செய்யப்பட்டு விட்டது.

மின்சாரத் துறையில் நிறைய ஊழல் குற்றச்சாட்டு உள்ளது என்கிறீர்கள் நடவடிக்கை எப்போது எடுக்கப்படும் குறித்த கேள்விக்கு:

எங்கெல்லாம் ஊழல் நடைபெற்றதோ அங்கெல்லாம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் பிரச்சனைகளை கண்டறிந்து சரி செய்யும் பணிகள் நடைபெறுகிறது. ஏற்கனவே டிரான்ஸ்பார்மர் ஊழல் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எடுக்கப்படும். மக்கள் பணத்தில் மக்களுக்கான நிறுவனத்திலோ யாரும் தவறு செய்தால் அதற்கான சட்டபூர்வமான நடவடிக்கை இருக்கும்.

சட்டத்துறை சம்பந்தமாக இன்று நடைபெற்ற ஆலோசனை கொடுத்த கேள்விக்கு: சட்டக் கல்லூரி குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. அரசு வழக்கறிஞர் நியமனம் மாவட்ட வழக்கறிஞர் நியமனம் குறித்த ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. சட்ட ஆணையம் குறித்து ஆலோசிக்கப்பட வேண்டி உள்ளது. அரசு சட்டக் கல்லூரி மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள் தவறான விதி மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதற்கும் சோகாஷ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அரசு இடங்களையும் அவர்களை நிரப்பியுள்ளனர் அது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் குறித்த பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளன

திருப்பரங்குன்றம் தொகுதியில் மேற்கொள்ள இருக்கும் பணிகள் குறித்த கேள்விக்கு:

திருப்பரங்குன்றத்தில் கழிவுநீர் கால்வாய் சரி செய்யப்படும் அதுபோக சிறிய குறைகளையும் கணக்கிட்டு சரி செய்யும் பணிகள் நடைபெறும் மதுரை முழுவதும் கழிவுநீர் கால்வாய் திட்டங்கள் சரியாக இல்லை அதனை முழுவதும் அதை செய்யப்பட வேண்டும் அதற்கான திட்டப்பணிகள் ஆலோசனை செய்யப்பட்டு அதன் பிறகு கழிவுநீர் கால்வாய் வெளியேற்றும் பணிகள் செய்யப்படும் இதுவரை யாரும் செய்யவில்லை என்பது மிகப்பெரிய வருத்தம்.

மதுரை முழுவதும் சீரமைக்கப்படும் அதற்கு பெரிய அளவு திட்டம் செயல்படுத்த வேண்டும் அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளோம் அது முடிந்த பின்பு தான் மற்ற பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.