ஓபிஎஸ் புலியா? பூனையா? என்பது விரைவில் தெரிந்துவிடும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்
அதிமுக தலைமை பதவிக்கு ஆசையில்லை என ஓபிஎஸ் சொல்வதெல்லாம் அரசியல் நாடகம்தான் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். திருவிழாவில் மிட்டாய் ஆசைகாட்சி குழந்தைகளை அழைத்துச்செல்வதுபோல் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுக்கும் ஓபிஎஸ் புலியா அல்லது பூனையா என்பதை விரைவில் அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் விரைவில் அறிவர் எனத் தெரிவித்துள்ளார்.