சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்து ஓ பி எஸ் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் ஜே.சி.டி.பிரபாகர்
அதிமுக அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்,’ ‘சசிகலாவை சேர்ப்பது பற்றி தலைமைக்கழக நிர்வாகிகள் முடிவெடுப்பர் என ஓபிஎஸ் கூறியது சரிதான். அதிமுகவின் எதிர்கால நலனை சிந்திக்கக்கூடிய தலைமை நிர்வாகிகள் உரிய முடிவை எடுக்க வேண்டும்.
ஓபிஎஸ் அவர்களின் நிலைபாடுதான் எனக்கும். எதிர்காலத்தில் இந்த இயக்கம் எப்படி இருக்க வேண்டும் என தலைமை கழக நிர்வாகிகள் கலந்து பேசி எடுக்க வேண்டிய முடிவு இது. இதில் எந்த மாற்றமும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை என நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.