• Thu. May 21st, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்..,

ByS.Ariyanayagam

May 21, 2026

தனியார் பள்ளி வாகனங்களை ஓட்டி பார்த்து ஆய்வு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் மேற்கொண்டார். தமிழகம் முழுவதும் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்லும் பள்ளி வாகனங்களை வருடா வருடம் பள்ளி துவங்குவதற்கு முன்பு மாவட்ட ஆட்சியர் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தீயணைப்பு துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் 2026 ஆண்டிற்கான பள்ளி வாகன சோதனையை மாவட்ட ஆட்சியர் சரவணன் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கண்ணன் ஆய்வாளர் இளங்கோ காவல்துறை அதிகாரிகள் தீயணைப்புத் துறையினர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னிலையில் வாகனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின்போது அரசு அறிவித்த படி வாகனங்களில் மஞ்சள் கலர் வர்ணம் பூசப்பட்டுள்ளதா முன்புறம் பின்புறம் வாகனத்தின் மேற்பகுதியில் பள்ளி வாகனம் என எழுதப்பட்டுள்ளதா கரு ஊதா நிறத்தில் பள்ளி குழந்தைகள் படத்துடன் முன்புறமும் பின்புறமும் எழுதப்பட்டுள்ளதா என்பதும் அதேபோல் பள்ளி பெயர் விலாசம் தொலைபேசி எண் அலைபேசி எண் முழு விபரங்கள் எழுதப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் பள்ளி வாகன அதிகாரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் காவல் நிலையம் மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்ட தகவல்கள் எழுதப்பட்டுள்ளதா என ஆராய்ந்தார்.வாகனத்தில் நுழைவு பாதை மற்றும் வெளியேறும் பாதை முறையாக அமைக்கப்பட்டுள்ளதா மாணவ மாணவிகள் குழந்தைகள் அமரும் இருக்கைகள் உறுதியாக உள்ளனவா என்பது குறித்து கேட்கப்பட்டது.

தரை முழுவதும் ஒரே தகடு மற்றும் பலகையால் அமைக்கப்பட்டுள்ளதா சிசிடிவி அமைக்கப்பட்டுள்ளதா முதலுதவி பெட்டி அமைக்கப்பட்டுள்ளதா.வேகக் கட்டுப்பாட்டு கருவி தீயணைப்பு கருவி உள்ளிட்டவைகள் உள்ளிட்ட 17 அரசு விதிமுறைப்படி பின்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார் .
மாவட்ட ஆட்சியர் சரவணன் ஒரு பள்ளி பேருந்தில் ஏறி அந்த வாகனத்தை சிறிது தூரம் ஓட்டிச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இன்று மொத்தம் 250 பேருந்துகள் ஆய்வுக்காக கொண்டுவரப்பட்டன.
திண்டுக்கல். தாடிக்கொம்பு. ஆத்தூர்.சின்னாளபட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிப் பேருந்துகளை ஆய்வு செய்தனர். சோதனையின் போது பேருந்துகளில் இஞ்சின் .பிரேக். CCTV. ஒலிப்பான். முகப்பு விளக்குகள் புலி தேவைகளை ஆய்வு செய்து செய்த வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு முதலுதவி சிகிச்சை விபத்தில் அடிபட்டால் முதலுதவி எவ்வாறு செய்வது என்பது குறித்தும் சுகாதார துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பயிற்சி அளித்தனர் மேலும் வாகன ஓட்டிகள் அனைவரும் உரிய முறையில் லைசென்ஸ் வைத்துள்ளனர் என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.