மரக்காணம் அருகே உள்ள கடப்பாக்கத்தில் அரசுப்பள்ளி ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீ ர் ஆய்வு மேற்கொண்டார்.

‘இல்லம் தேடி கல்வி’ என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைக்க கிழக்கு கடற்கரை சாலை வழியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். அப்போது வழியில் கடப்பாக்கத்தில் உள்ள அரசுப்பள்ளிக்கு தீடிரென சென்ற அவர் மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்ததுடன், பள்ளி ஆசிரியர்களிடமும் உரையாடினார். மேலும், பள்ளியில் சமைக்கப்பட்ட மதிய உணவையும் ஆய்வு செய்தார்.





இந்த ஆய்வின் போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.