சேலம் பெங்களூர் நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாக இயங்கிகொண்டு இருக்கும் சாலை. பல்வேறு வண்டிகளும் வாகனங்களும், கனரக வாகனங்கள் இந்த வழியாக செல்வது வழக்கம்.

இந்த பகுதியில் அமைந்துள்ள வெண்ணங்கொடி முனியப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நிலையில், இந்த கோவிலின் அருகில் சாலை சரி செய்யப்பட்டு வருகிறது.

இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, நீண்ட வரிசையில் வாகனங்கள் இரண்டு பக்கமும் வாகனங்கள் நின்ற வண்ணம் உள்ளது. இதனால் சாலை சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.