• Fri. May 22nd, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் பொருத்துவதற்கு அளவீட்டு முகாம்..,

BySeenu

May 22, 2026

மாற்றுத்திறனாளிகள் நவீன தொழில்நுட்ப உதவியுடன் தன்னம்பிக்கையுடனும் சுயநிறைவு வாழ்க்கையுடனும் வாழ உதவும் நோக்கில், தேசிய விருது பெற்ற சமூக சேவை அமைப்பான நாராயண் சேவா சன்ஸ்தான் (Narayan Seva Sansthan) சார்பில் மாபெரும் இலவச மாற்றுத்திறனாளிகள் திருத்த அறுவை சிகிச்சை பரிசோதனை, தேர்வு மற்றும் ஜப்பான் – ஜெர்மன் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட முப்பரிமாண தொழில் நுட்ப (3D Printed Narayan Modular) செயற்கைக் கால் அளவீட்டு முகாம் வரும் மே 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவையில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை ஆர்.எஸ்.புரம் இராஜஸ்தானி அரங்கில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில்,முகாம் ஒருங்கிணைப்பாளர் அச்சால் சிங் பட்டீ (Achal Singh Bhati) மற்றும் சமூக செயற்பாட்டாளர் சந்தோஷ் முந்த்ரா ஆகியோர் கூறுகையில்,
கோவையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த முகாம் நடைபெறுவதாகவும், முன்னதாக நடைபெற்ற முகாமில் 650-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் செயற்கைக் கால்கள், மருத்துவ உதவிகள் மற்றும் மறுவாழ்வு சேவைகள் மூலம் பயனடைந்தனர். முதல் முகாமிற்கு கிடைத்த மகத்தான வரவேற்பைத் தொடர்ந்து, மீண்டும் மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளுடன் இரண்டாவது முறையாக இந்த முகாம் நடத்தப்படுகிறது.

மே 24 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை கோவை சோமையம்பாளையம், கே.என்.ஜி. புதூர் பிரிவு, தடாகம் மெயின் ரோட்டில் உள்ள மகேஷ்வரி பவான் வளாகத்தில் நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பதிவு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் நடைபெறும் எனவும், இந்த முகாம் மாட்ரூ ஸ்ரீ சாந்தாபென் திரிபுவெந்தாஸ் பட்டேல் (Matrushree Shantaben Tribhuvandas Patel Charitable Trust) அறக்கட்டளையுடன் இணைந்து நாராயண் சேவா சன்ஸ்தான் நடத்துவதாக தெரிவித்தனர்…

தொடர்ந்து முகாம் தொடர்பான தகவல் போஸ்டர் வெளியீடு செய்யப்பட்டது..

இந்நிகழ்ச்சியில், அச்சால் சிங் பட்டீ (Achal Singh Bhati) மற்றும் சமூக செயற்பாட்டாளர் சந்தோஷ் முந்த்ரா,கமல் கிஷோர் அகர்வால்,ஜிதேந்திரா புகாலியா,ராஜேஷ் அகர்வால் ஆகியோர் வெளியிட்டனர்.