


பாகிஸ்தானில் அந்நிய செலவாணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் பொருளாதார நெருக்கடி தொடங்கியுள்ளது.
இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானிலும் பொருளாதார நெருக்கடி துவங்கியுள்ளது .கடந்த 2 மாதங்களுக்குமுன் இலங்கை இருந்த நிலையை தற்போது பாகிஸ்தான் அடைந்துள்ளது.அத்தியாவசியப்பொருட்கள் கிடைப்பதில்லை,பெட்ரோல் ,உள்ளிட்ட எரிபொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானில் நிலவி வரும் சூழலை முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
லாகூரில் என்ன நடக்கிறது? பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் இல்லை. ஏடிஎம் இயந்திரங்களி பணம் இல்லை. அரசியல் வாதிகள் எடுக்கும் முடிவுகளால் பொதுமக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?இவ்வாறு முகமது ஹபீஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்த டுவிட்டர் பதிவை வெளியிட்ட அவர், இம்ரான் கான், மரியம் ஷரிப், பில்வால் பூட்டோ, பிரதமர் ஷெபாஷ் ஷரிப் உள்ளிட்டவர்களை டேக் செய்துள்ளார்.

