• Tue. Mar 19th, 2024

உலக முழுவதும் வேகமாக பரவி வரும் குரங்கு அம்மை

ByA.Tamilselvan

May 26, 2022

உலகம் முழுவதும் 215 பேர் குரங்கம்மை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதாரஅமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று முடிவுக்கு வராமல் அதிகரித்துவருகிறது. தடுப்பூசிகள் போட்ட நபர்களுக்கும் மீண்டு ம் கொரோனா தொற்று பரவிவிடுகிறது. இந்நிலையில்மேற்கத்திய நாடுகளில் புதிதாக ‘மங்கி பாக்ஸ்’ என்று அழைக்கப்படுகிற குரங்கு காய்ச்சல் பரவல் பெருத்த கலக்கத்தை ஏற்படுத்து வருகிறது.
குரங்குகளுக்கு வருகிற ஒருவித வைரஸ்தாக்குதல்தான் குரங்கு அம்மை. அந்த வைரஸ் தாக்குதல் தற்போது மனிதர்களுக்கு தொற்றிஉள்ளது.காய்ச்சல், கணுக்களில் வீக்கம், கொப்புளங்கள் போன்றவை இந்த குரங்கு காய்ச்சலின் அறிகுறிகளாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. எளிதாக இந்த நோய் பரவிவிடாது என்றாலும் நெருங்கிய உடல் தொடர்புகள், பாலுறவு போன்றவற்றினால் பரவும். மனிதர்களுக்கு இந்த வைரஸ் கண்கள், மூக்கு, வாய், உடல் திரவங்கள், சுவாச நீர்த்துளிகள் வாயிலாக பரவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
குரங்கு காய்ச்சலைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையின்றி சில வாரங்களில் நோயிலிருந்து மீண்டு விடலாம் என்றாலும், வளரும் குழந்தைகள், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு உடையவர்கள் போன்றோருக்கு இந்த நோய் தாக்குதல் தீவிரமாகலாம்.
இந்நிலையில் உலகம் முழுவதும் குறிப்பாக ஜரோப்பிய ஒன்றியத்தில் 219 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நோய்கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *