

மோடி பக்தர்கள் படிப்பறிவில்லாதவர்கள் என சுப்பிரமணிய சுவாமி விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோடியின் பக்தர்கள் படிப்பறிவில்லாதவர்கள் என பாஜக எம்.பி.யும் , மூத்த தலைவருமான சுப்பிரமணியசுவாமி விமர்சித்துள்ளார்.இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 5 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்துவதாகக் கூறியவர்கள் தற்போது மந்த நிலை இல்லை எனக்கூறும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கூறியுள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மந்த நிலையில் இல்லை என பேசியிருந்தார். இதை குறிப்பிட்டு சுப்பிரமணியசுவாமி பேசியுள்ளார். பாஜக மூத்த தலைவரே இப்படி விமர்சித்திருப்பது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
