
தன்னிச்சையாக செயல்படும் அமலாக்கத்துறை குறித்து பேசும் அண்ணாமலை அதன் இயக்குனரா என அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி ஒன்றில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை விரைவில் விசாரணை நடத்தும் . அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது வேறு விசாரணையில் பிசியாக உள்ளனர். என பேசியிருந்தார்.இதற்கு பதில் அளிக்கும் விதமாக “தனிச்சையாக செயல்படும் அமலாக்கத்துறை அமைப்பை பற்றி பாஜக தலைவர் அண்ணாமலை எப்படி பேச முடியும்” என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பெட்ரோல் ,கேஸ் விலை உயர்வை கண்டித்து பாஜக ஏன் போராட்டம் நடத்தவில்லை என்றும் கேள்வி கேட்டுள்ளார்.