
தேவையான பொருட்கள்:
மீல்மேக்கர் -100 கிராம்
பெரிய வெங்காயம் -2பொடியாக நறுக்கியது,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை
கேரட் -4(துருவல்)
மிளகாய் பொடி, உப்பு தேவையான அளவு
எண்ணெய் -1/2லி
செய்முறை:
மீல்மேக்கரை கொதிக்கும் வெந்நீரில் 1மணி நேரம் ஊற வைத்து, பின் நன்கு பிழிந்து எடுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக சுற்றி எடுக்கவும். அதனுடன் வெங்காயம், கேரட், மல்லி இலை, உப்பு, மிளகாய் பொடி சேர்த்து நன்கு பிசைந்து வடை போல தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சுவையான மாலை நேர டிபன் ரெடி.
