மதுரையில் உரிய ஆவணம் இன்றி இருசக்கர வாகனத்தில் எடுத்து வரப்பட்ட 2 கோடியே 94 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை கரிமேடு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நேற்று நள்ளிரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் பையுடன் சென்ற இளைஞர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பரிசோதனை செய்தனர். அப்போது நகைக்கடை உரிமையாளரான விக்னேஷ்வரன் வைத்திருந்த பையில், கட்டுக்கட்டாக 2 கோடியே 94 லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்தது. கணக்கில் வராத பணத்தை எடுத்துக் கொண்டு நகை வியாபாரம் தொடர்பான பரிவார்த்தைக்கு சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்ததை அடுத்து, மதுரை வருமான வரித் துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த வருமான வரித்துறையினர் விக்னேஷ் மற்றும் அவருடன் வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.