• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை.. காதலனுடன் கைது!

By

Sep 11, 2021 ,

தூத்துக்குடியில் 15 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக , சிறுமியின் தந்தை மற்றும் சிறுமியின் காதலன் இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள மானாத்தூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி தீராத வயிற்று வலியால் துடித்துள்ளார். உடனடியாக சிறுமியை அவரது தாயார் சிகிச்சைக்காகக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மருத்துவர்கள் கூறியதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் மகளிடம் விசாரித்ததில் சிறுமி கூறிய தகவல் அவருக்கு பேரிடியாக இறங்கியுள்ளது.
சிறுமியின் தந்தையான முனியசாமி பெற்று மகள் என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் , ஓட்டப்பிடாரத்தை அருத்த மேட்டூர் வ.உ.சி காலனியைச் சேர்ந்த அழகு என்ற அறிவுமதி என்ற இளைஞரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கடம்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமியின் தந்தை முனியசாமி மற்றும் காதலன் அறிவுமதி இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.