• Wed. Apr 24th, 2024

தாம்பரம் மாநகராட்சி அமைப்பதற்கான அரசாணை வெளியீடு

By

Sep 12, 2021 , ,

தாம்பரம் மாநகராட்சி அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடரில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்ற போது, நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் அமைச்சர் கே.என்.நேரு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி தாம்பரத்தை மாநகராட்சியாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.
தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றும் அருகில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தாம்பரம் மாநகராட்சி அமைப்பதற்காக தாம்பரம், பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் ஆகிய 5 நகராட்சிகளை இணைத்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது

சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கங்கரணை, திருநீர்மலை பேரூராட்சிகளை தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய மாநகராட்சிக்கான எல்லையை வரையறை செய்து, புதிதாக வரைபடம் தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. மாநகராட்சியின் பரப்பளவு 87.64 ச.கி.மீ, மக்கள்தொகை 9,60,887 ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *