
பேரழகனே..,
என் இனிய காதலனே
நீ என்னை விட்டு வெகுதூரம் பிரிந்து இருந்தாலும்
என் இதயத் துடிப்போசை கூட
உன் நினைவுகளையே பறைசாற்றுகிறது
உன் புன்னகை ததும்பும் பூமுகம்
என் மனக்கண்ணாடியில்
நர்த்தனம் ஆடுகிறது…
உன் நேசமிகு வார்த்தைகள் நெஞ்சாங்கூட்டில் நிறைந்து வழிகிறது…
உன்னை பாராமல் தவிக்கும் தவிப்பு கூட
எனக்கு சுகம்தானய்யா…
இந்த பிரிவினில் நம் நேசப் பயிர்கள்
துளிர் விடுகிறது கணக்கில்லாமல்
என்ன மாய மந்திரம் செய்தாயோ
என்னை மயக்கிய கள்வனே
என் பேரழகனே…

கவிஞர் மேகலைமணியன்
