• Sun. Jun 15th, 2025
[smartslider3 slider="7"]
பேரழகனே!

விட்டுச்செல்லவும் மனது வரவில்லை
கையோடே கூட்டிச்சென்றுவிடவும் தோதாக இல்லை

போகிறது போ!

உன்னுடனான என் எண்ணங்களின் நினைவுகளை
உன்னுடன் பேசி வாழ்ந்த கணங்களுக்குள்
பொதிந்து வைத்துக்கொள்கிறேன்.

திரண்டு விழாது
கண்களிலேயே தங்கிய
விடைகொடலின் கண்ணீர்,

ஏன் இத்தனை இனிக்கிறது!!
ஏன் இத்தனை கனக்கிறது!!
ஏன் இத்தனை கரிக்கிறது
என் பேரழகனே

கவிஞர் மேகலைமணியன்