பேரழகனே..,
பாரேன் பொல்லாத இந்த
நேசம்தான்
எப்போதுமே
சொன்ன பேச்சினைக்
கேட்பதில்லை..,
இருப்பது என்னவோ எனக்குள் தான்
என்றாலும் கூட
விடாமல்
துடிப்பது என்னவோ
உனது
பெயரை சொல்லித்தானே..,
மறந்துவிடு என்று ஆணை
பிறப்பிக்கப்பட்ட
மறு நொடியே
பதிலாக உயிர்
உரைக்கிறது
மறுபடியும்..,
மறப்பதற்கு பதில் மரித்தலே
எளிது என்கிறது
என்னிடம் இறைஞ்சியே
என் இதயமும்..,
என் எண்ணங்களில்
வண்ணங்களை வார்த்திடும் ஓவியக்காரா
கொஞ்சம் ஓய்வு கொடு
ஓயாத உன் நியாபங்களுக்கு
என் பேரழகனே..!
கவிஞர் மேகலைமணியன்