

பேரழகா!
தடுக்க எத்தணித்தாலும்
மறுக்க முடியாத ஆனந்தத்
தருணங்கள்…
கொடுக்க நினைத்தாலும்…
எட்டிடாத இடைவெளியாய்
தொலைவுகள்;
நிலவுக்கும் பூமிக்கும்
இடையேயான உறவிது…
ஆனாலும் ஒன்றையொன்று
அழகாக்கிடத் தவறுவதில்லை!
தூரமிங்கே தொலைவுகளுக்கே;
தொலையாத நியாபகங்களுக்கு
என்றுமில்லை….
என் பேரழகா

கவிஞர் மேகலைமணியன்

