• Mon. Mar 17th, 2025

நீதிமன்ற வளாகம் முன்பு நீதித்துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நீதிமன்ற வளாகம் முன்பு நீதித்துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சாத்தூரில் திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மாற்றுப்பணியில் பணிபுரிந்த அருண் மாரிமுத்து அவர்களது மரணத்திற்கு உரிய நீதி கிடைக்கவும், அவரது மனைவி மற்றும் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் சாத்தூர் நீதித்துறை ஊழியர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அருண் மாரிமுத்து மீது பணி ரீதியாக தொடர்ந்து தொல்லைகளையும், துன்பங்களையும் கொடுத்து மனரீதியாக அவரை பாதிப்படையச் செய்து, அவரது இறப்பிற்கு காரணமான நீதிபதி அவர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து அவர் மீது குற்ற மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கவும் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள நீதித்துறை ஊழியர்கள் அனைவருக்கும் பணிப்பாதுகாப்பு வழங்கக் கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தினை வலியுறுத்தியும், உரிய நீதி கிடைக்கவும் சாத்தூர் நீதிமன்றம் முன்பு சுமார் 20 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.