• Mon. Jun 1st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

மாற்றம் வரும் என்பதற்காக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியுள்ளோம்..,

ByKalamegam Viswanathan

Jun 1, 2026

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாவட்ட மத்திய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாநில தலைவர் மகேந்திர குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும் செயற்குழு கூட்டத்தில் இந்த மாதம் பணி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. மாநில தலைவர் மகேந்திரகுமார் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கேடயம் வழங்கி கௌரவித்தார். இதில் அரசு ஊழியர் சங்கத்தினர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாநில தலைவர் மகேந்திர குமார்,

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் விருதுநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.‌ கடந்த 59 ஆண்டுகளில் அரசு அலுவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மாற்றம் வரும் என்பதற்காக நாங்களும் வாக்களித்து உங்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியுள்ளோம்‌‌. நீங்கள் உங்கள் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள அறம் பொருள் இன்பம் பழைய ஓய்வூதியத்தை கொண்டு வருவோம் என்ற தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை போல் 1.4.2003 முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்க வேண்டும் எண்ணற்ற ஓய்வூதியதாரர்களும் பணியில் உள்ளவர்களும் இதை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

நீங்கள் உங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் எங்கள் குறைகளை கேட்டு களைவதற்காக அரசு பணியாளர் தேர்வாணையம் உள்ளதை போல் பணியாளர் வாரியம் அமைக்க வேண்டும் என்பதை கோரிக்கையாக வைக்கிறோம். அதேபோல கருணை அடிப்படையிலான பணி நியமனம் குறிப்பிட்ட துறைகளை தவிர மற்ற துறைகளுக்கு வழங்கப்படவில்லை சமூக நீதி காக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு 59 ஆண்டுகளாக இருப்பதை நீங்கள் களைவீர்கள் என்ற நம்பிக்கையோடு உங்களுக்கு அரசு ஊழியர்கள் வாக்களித்துள்ளார்கள் ‌ அதன் அடிப்படையில் எங்கள் பகுதியில் உள்ள சத்துணவு, அங்கன்வாடி, சமையலர்கள், ஊரு ஊர் புர நூலகர்கள், தூய்மை காவலர்கள் ஆகியோருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் கல்வித் தகுதியின் அடிப்படையில் வழங்க வேண்டும். அதேபோல தூய்மை காவலர்கள் முதல் சமையலர்கள் வரை தின கூலி, அத்துக்கூலியாக வழங்கப்படும் ஊதியத்தை நிரந்தரப்படுத்தி எங்கள் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முந்தைய அரசுகளிடம் வைத்த நிலையில் அவர்கள் செவிமடுக்கவில்லை என்பதற்காகத்தான் உங்களுக்கு வாக்களித்துள்ளோம் மாண்புமிகு முதலமைச்சர் தற்போது தான் பதவி ஏற்றுள்ளார்கள் அவர்களுக்கு மூன்று வார காலம் அவகாசம் அளித்துள்ளோம்.

இந்த கால அவகாசத்தில் புரிந்து கொண்டு எங்கள் துறைகளை தெரிந்து கொண்டு பிரதான கோரிக்கைகளான கருணை அடிப்படையிலான பணி நியமனம் பழைய ஓய்வூதிய திட்டம் நிரந்தர சம்பளம் பணியாளர்கள் குறைகளை கேட்க வாரியம் ஆகியவற்றை நிறைவேற்றுவீர்கள் என்ற பெரிய எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.