• Sat. Apr 26th, 2025

முன்னாள் அமைச்சர் கே .டி. இராஜேந்திரபாலாஜி நிதி உதவி

ByK Kaliraj

Feb 28, 2025

திருத்தங்கல் நாடார் நந்தவனத் தெருவை சேர்ந்த இளைஞர்கள் கோகோ விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைக்க கே.டி.இராஜேந்திரபாலாஜிக்கு அழைப்பு விடுத்தனர்.

விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே .டி .இராஜேந்திர பாலாஜியை சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் நாடார் நந்தவனத் தெருவை சேர்ந்த இளைஞர்கள் கோகோ விளையாட்டு போட்டி நடத்துவதற்காக ஏற்பாடு செய்து வருகின்றனர்.

KTR SPARTANS அணியினர் கோகோ விளையாட்டு போட்டி கலந்து கொள்கின்றனர். கோகோ விளையாட்டு போட்டியை தலைமை தாங்கி நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர். விளையாட்டுபோட்டியில் கலந்து கொள்வதாக முன்னாள் அமைச்சர் கே .டி. இராஜேந்திரபாலாஜி தெரிவித்து நிதி உதவி அளித்தார்.