

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி மேற்கு பகுதியில் பராசக்தி காலனி அமைந்துள்ளது. இப்பகுதியில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீபால விநாயகர் திருக்கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவில் திருப்பணிக்கு திருப்பணி குழு கமிட்டியினர் முன்னாள் அமைச்சரும் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே. டி. இராஜேந்திர பாலாஜியிடம் நேரில் சென்று திருப்பணிக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தனர்.


அதனை ஏற்று கோவில் திருப்பணிக்கு ரூபாய் 2 லட்சம் நன்கொடையாக வழங்கி கும்பாபிஷக திருப்பணிகளை சிறப்பாக செய்யுமாறு கேட்டுக் கொண்டார். நிதி வழங்கிய முன்னாள் அமைச்சர் கே. டி. இராஜேந்திரபாலாஜிக்கு திருப்பணி குழு கமிட்டியினர் நன்றி தெரிவித்து கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.



