

திமுகவில், நிர்வாக வசதிக்காக மாவட்ட ஒன்றியங்கள் கூடுதலாக பிரிக்கப்பட்டுள்ளது’ என அக்கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவின் நிர்வாக வசதிக்காகவும், கட்சிப் பணிகள் செவ்வனே நடைபெறவும், மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியங்கள் கூடுதலாக பிரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரை தெற்கு மாவட்டம், தர்மபுரி கிழக்கு மாவட்டம், தர்மபுரி மேற்கு மாவட்டம், விழுப்புரம் மத்திய மாவட்டம், வேலூர் கிழக்கு மாவட்டம், திருப்பூர் தெற்கு மாவட்டம், தூத்துக்குடி தெற்கு மாவட்டம், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்.திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், தர்மபுரி மாவட்டம், விருதுநகர் வடக்கு மாவட்டம், திருநெல்வேலி மத்திய மாவட்டம், திருவள்ளூர் மத்திய மாவட்டம், திருவள்ளூர் கிழக்கு மாவட்டங்களில் ஒன்றியங்கள் கூடுதலாக பிரிக்கப்பட்டுள்ளது” என அதில் தெரிவித்துள்ளார்.
