பக்கத்து ஊரில் உள்ள ஒருவர் நீங்கள் எங்கிறீர்கள் கேட்டால் எனது ஊரில் எனது வீட்டில் உள்ளேன் என சொல்லாம்,பக்கத்து மாநிலத்திலிருந்து கேட்டால் தமிழ் நாட்டில் எனது ஊரில் ,எனது விட்டில் உள்ளேன் என சொல்லாம் ,வேறு ஒரு நாட்டிலிருந்து கேட்டால் இந்தியாவில்,தமிழ்நாட்டில் எனது ஊரில்,எனது வீட்டில் உள்ளேன் என சொல்லாம்….
ஒட்டுமொத்தமாக நம்மை சுற்றியுள்ள பிரபஞ்சத்தில் நாம் எங்கிருக்கிறோம் என்ற கேள்விக்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்…
அந்திகேள்விக்கான பதிலை தேடி செல்லாம்….
நம்மை சுற்றியுள்ள பிரபஞ்சத்தில் சூரியன் என நாம் பெயரிட்டுள்ள நட்சத்திரத்தில் 3 வதாக உள்ள பூமி என்ற மனிதர்கள் வாழ தகுதியான கிரகத்தில் வாழ்கிறோம்.
சூரியனை பூமி சுற்றி வருகிறது… சூரியன் எதை சுற்றிவருகிறது …. எங்கேயிருக்கிறது என்ற அடுத்த கேள்வி வருகிறது..
நம்மை சுற்றியுள்ள எல்லையற்ற பிரபஞ்சத்தில் பல தன்மைகள் கொண்ட பொருட்கள் உள்ளன.நம் பூமியை போன்ற கோள்கள்,சூரியனை விழுங்கும் கருந்துளைகள், பல கோடி சூரியனைகளை கொண்ட கேலக்சிகள்,மனிதர்களால் அடையாளம் காண முடியாத பல பொருட்கள் உள்ளன.
கோடிகோடிக்கான நட்சத்திரங்கள் (கோடிகோடி என்பதற்கு மேல் சொல்ல சொற்கள் இல்லை ,,,,) அடங்கிய கேலக்கிசிகள் நம்மை சுற்றியுள்ள பிரபஞ்சத்தில் அதிகம்.
இதில் நம் சூரியன் இருப்பது மில்கிவே- அதாவது பால்வெளி மண்டலம் என அழைக்கப்படுகிறது. பால்வெளி மண்டலத்தில் உள்ள கோடிகோடிக்கான நட்சத்திரங்களில் சூரியனும் ஒன்று. பால்வெளிமண்டலம் பூமியிலிருந்து பார்க்கும்போது தட்டை வடிவில் தோற்றம் தரும்.1610 ம் ஆண்டு கலீலியோ தனது சிறிய தொலைநோக்கி மூலம் பார்த்துள்ளார்.
150,000 முதல் 200000 ஒளியாண்டுவிட்டம் கொண்டது.அதாவது ஒளியின் வேகத்தில் … 1நொடிக்கு 100000 கிமி வேகக்தில் பயணித்தால் மில்கிவே கேலக்சியை ஒரு முனையிலிருந்து மற்று முனையை கடக்க 2 லட்சம் ஆண்டுகள் ஆகலாம் அப்படி என்றால் மில்கிவேயின் பிரமாண்டம் என்ன வென் புரிந்து கொள்ளலாம்.இதே போல பிரபஞ்சம் முழுவது பல கோடி கேலக்சிகள் உள்ளன.
நாம் அதாவது நாம் வாழும் சூரிய மண்டலம் பால்வெளி மண்டலத்தின் மையத்திலிருந்து சற்றே விலகி யுள்ளது. அங்கே தான் நாம்இருக்கிறோம்..இதில் சாதி,மதம்,அரசியல் என ஆயிரம் பிரச்சனைகள்….