• Mon. Jul 20th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

குன்னம் தொகுதியில் முதல் பெண் வேட்பாளராக நிற்கிறேன்- சரண்யா உறுதி!

ByVelmurugan .M

Apr 19, 2026

பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட, குன்னம் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் IJK வேட்பாளராக சரண்யா போட்டியிடுகிறார்.

இந்நிலையில் வேப்பூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஒன்றிய செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன் ஏற்பாட்டில், முன்னாள் துணை சபாநாயகர் அருணாச்சலம் தலைமையில், முன்னாள் எம்பி சந்திரகாசி பெரம்பலூர் அதிமுக மாவட்ட அவை தலைவர் குன்னம் குணசீலன் ஆகியோர்களின் முன்னிலையில் தீவிரமாக பிரச்சாரம் நடைபெற்றது.

அப்போது வேட்பாளர் சரண்யா அன்பழகன் பேசுகையில், குன்னம் தொகுதியில் முதல் பெண் வேட்பாளராக நான் களம் காண்கிறேன். எனக்கு அனைவரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு உங்கள் பொற்பாதங்களை வணங்கி கேட்டுக்கொள்கிறேன்,
மேலும் குன்னம் தொகுதியில் மருத்துவத்திலும், கல்வியிலும் முதன்மையாக செயல்பட்டு வருவதற்கு நிச்சயமாக நான் பாடுபடுவேன். எனவே அனைவரும் எனக்கு ஒரு வாய்ப்பளித்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் நாகராஜன் வி.ஜி.எம்.வெங்கடாசலம், குன்னம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன், முன்னாள் கவுன்சிலர் முருகேசன், மதியழகன், பொதுக்குழு உறுப்பினர் ரங்கநாதன், கிளை செயலாளர் ராஜா, ரமேஷ், வெள்ளையன், மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முன்பதாக பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகம் மிட்டு வாழ்த்தினர்.