மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை என்ற இடத்தில் மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது தேனியில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரி மோதி மாதரை கிராமத்தைச் சேர்ந்த பாலு (65) என்ற முதியவர் சம்பவ இடத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.,

தொடர்ந்து இப்பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதாகவும் சாலை விபத்தை தடுக்கவும் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடை அமைக்க வேண்டும், இரவு நேரங்களில் மின்விளக்கு இல்லாததால் மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் மதுரை -தேனி தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்தில் பலியான முதியவரின் உடலை வைத்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,
சம்பவம் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா போலீசார் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரியிடம் பேசி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.,

தொடர்ந்து சம்பவ இடத்தில் பலியான முதியவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக உசிலம்பட்டி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.,
இந்த சாலை விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.,




