• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டிஅருகே லாரி மீது தனியார் ஆம்னி பேருந்து மோதி விபத்து..,

ByKalamegam Viswanathan

Jul 20, 2026

கர்நாடக மாநிலம் பெங்களுரிலிருந்து மதுரை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து நேற்று இரவு 30 பயணிகளுடன் கிளம்பியது, பேருந்தை அருப்புக்கோட்டையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (43) மற்றும் நடத்துனர் ரூபன் (23) ஆகியோர் பேருந்தை ஒட்டி வந்த நிலையில்,

இன்று அதிகலை மதுரை – திண்டுக்கல் நான்கு வழிச்சாலை. வாடிப்பட்டி அருகே விராலிபட்டி பிரிவு அருகே வந்த போது முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் அதிவேகத்தில் சென்ற ஆம்னி பேருந்து லாரியின் பின்பக்கம் பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் ஆம்னி பேருந்து சாலையில் சென்டர் மீடியன் மீது ஓடி சாலையின் நடுவே சென்று நின்றது.

இதில் ஆம்னி பேருந்து ஓட்டுநர், மற்றும் நடத்துனர் படுகாயம் அடைந்தனர், பேருந்தின் முன்பகுதி நொறுங்கியது, இதில் பயணிகள் 10 பேர் வரை காயம் அடைந்தனர்.

பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே சென்ற பொதுமக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்,

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக பயணிகளை பத்திரமாக மீட்டனர், படுகாயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்தில் 10 பயணிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் விபத்து குறித்து வாடிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.