பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட குன்னம் சட்டமன்ற தொகுதியில் NDA கூட்டணி சார்பில் IJK வேட்பாளர் சரண்யா அன்பழகன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்று ஐஜேகே நிறுவனர் குன்னம் தொகுதிக்குட்பட்ட லப்பைகுடுக்காட்டில் இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிக்க சென்றார்.
அப்போது அவர் பேசியதாவது நம் கட்சியின் வேட்பாளர் அன்பு சகோதரி சரண்யா அன்பழகனை வெற்றி பெறச் செய்தால், உங்களுக்கு 100 சீட் (இலவசக் கல்வி இடங்கள்) குன்னம் தொகுதிக்குக் கொடுப்பதாக நான் ஏற்கனவே வாக்குறுதி கொடுத்திருக்கிறேன்.

அவற்றில் குறிப்பாக, இந்த லப்பைக்குடிக்காட்டிற்கு 10 சீட் தனிப்பட்ட முறையில் – (உள் ஒதுக்கீடு) குன்னத்திற்கு 100 சீட்டில் லப்பைக்குடிக்காட்டிற்கு 10 சீட் வழங்கப்படும்.
அந்த பத்தும் உங்களுடைய அன்பு சகோதரியும், வேட்பாளருமான சரண்யா அன்பழகன் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ, அவர்களுக்கு எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் வாய்ப்புக் கொடுத்து, பட்டதாரியாக்கி, வேலைவாய்ப்பையும் பெற்றுத் தரப்படும் என்று இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன்.
எனவே இந்த லப்பைகுடிக்காடு சகோதர, சகோதரிகளின் வாக்குகளை முழுமையாகப் போட்டு யாரைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவரே வெற்றியாளர்.”
“இங்கு 10,000 வாக்குகள் இருப்பதாகவும், அதில் 9,400 வாக்குகள் பெற்றால் வெற்றி வாய்ப்பு உறுதி என்றும் கூறப்படுகிறது.
உங்கள் மனதை யார் கலைக்க வந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, என் அன்பு நண்பர் சாம்சன் அவர்கள் உங்களை வழிநடத்துவார்.”
“அத்தனை வாக்குகளும் ஐ.ஜே.கே வேட்பாளருக்கும், எங்களது சின்னமான இரட்டை இலைக்கும் அளித்து உங்கள் வேட்பாளர் சரண்யா அன்பழகனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் லப்பைகுடிகாடு கிழக்கு பள்ளிவாசல் ஜமாத் தலைவர் சம்சுதீன், லப்பைகுடிகாடு மேற்கு பள்ளிவாசல் ஜமாத் தலைவர் பிச்சை முகமது உள்ளிட்ட ஜமாத் நிர்வாகிகள், முன்னாள் துணை சபாநாயகர் அருணாசலம், முன்னாள் எம்.பி சந்திரகாசி, அதிமுக ஒன்றிய செயலாளர்கள் செல்வமணி, ஏ.கே. ராஜேந்திரன், ஐஜேகே மாநில பொதுச்செயலாளர் சண்முகம், அமமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், கூட்டணி கட்சிகளை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, லப்பைகுடிக்காடு பேரூர் பொறுப்பாளர்கள், கிளை நிர்வாகிகள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.



